Monday, August 3, 2009

தனிமை


தாலாட்டுப் பாடி
தாய் மடியில் உறங்கையிலே..
தளிர் விட்ட கனவுகள்
தடுமாறிப் போவதென்ன...

ஓடும் மேகமே
ஒரு நொடி நில்லாயோ..
தன்னந்தனி நிற்கையிலே
தன்னினைவு மறக்குதம்மா..

தென்றல் காற்றே ..
தேடுகிறேன் உன்னை ..
தொட்டுச் சென்றவளே ...
தொங்கி நில்லாயோ ...!

பறக்கும் சிட்டே
பால்நிலவில் என் வீடு
பனைமரத்தில் உன் கூடு
தடியோரம் நீயுறங்க..
தரையோரம் நானுறங்க..
உனக்கென்றே சொந்தங்கள்
எனக்கென்று நீதானே...!

முகில் கூட்டம் கொஞ்சையிலே
மூன்று மணித்துளியில்
என்னைத் தழுவவிடுவாள்
அலைபாயும் அருவிநீர்..!

துடுப்பின்றிப் படகுகள்
துடித்தன கடலிலே
தடம் புரண்ட ரயிலாக
சிதறுது என்மனம்

யார் அங்கு செல்கையிலும்
நான் அங்கே பார்ப்பேன்
நான் அங்கே செல்கையிலே
யார் என்னைப் பார்ப்பார்

உறவுகளைத் துறந்து ஓரமாய்
இருக்கையிலே
ஓநாயும்
என் ஒருவன் தான் ...

தேனெடுக்க வந்து
மலருக்கு முத்தம்
காற்றென வந்து
இலைகளில் தழுவல்
சிட்டென வந்து
நரம்புகளில் கூடு
அனைத்தையும் கண்டேன்
ஓரமாய் இருந்து..

தனிமை அழைக்கையிலே
தவமான காலந்தான்
தனிஎன்று எண்ணாதே
தாகங்கள் தீருமங்கே
இயற்கை இசைக்கையிலே
ஈசனும் வருவானே
வருவாயே நீயங்கே..!

அரும்புகள் மலர்கையிலே
எறும்புகள் நுழைவதும்
காதல மலர்கையிலே
கண்கள் கவிபாடும் ..

அன்புடன்
இளையகவிஞர்
ஈழமகன்
www.priyanga2008.blogspot.com

No comments:

Post a Comment