Tuesday, February 20, 2018

Wednesday, June 2, 2010

தவிப்பு


என்னவென்று சொல்வதிங்கு
ஏன் என்னை காதலித்தாய்
ஏதேதோ இன்னல்கள்
தாக்கிடா உள்ளமே
உள்ளேயே அழிந்தது
உன்னுள்ளம் கண்டே ......

என் பூவுள்ளம் தந்தேனே
உன்னுள்ளக்கல்லிலங்கு
நழுவாமல் பற்றி
உயிரோடு பிசைந்தது
புனைத்தாயே புதுமொட்டு.....!

ஏதேதோ ஞபகங்கள்
எனைக் கொல்லும் நேரங்கள்
நீயின்றி எண்ணங்கள்
நீங்காமல் உள்ளத்துள்
ஓடோடி வந்து ஓயாமல் தாக்கிறதே..........

எனை மறந்து போனவனே
எதைமறந்து போனாயோ
எதை மறைத்துககொண்டாயோ
அதைமணந்தது கொண்டாயோ

அன்புடன் அஜந்தன்

Monday, August 3, 2009

தனிமை


தாலாட்டுப் பாடி
தாய் மடியில் உறங்கையிலே..
தளிர் விட்ட கனவுகள்
தடுமாறிப் போவதென்ன...

ஓடும் மேகமே
ஒரு நொடி நில்லாயோ..
தன்னந்தனி நிற்கையிலே
தன்னினைவு மறக்குதம்மா..

தென்றல் காற்றே ..
தேடுகிறேன் உன்னை ..
தொட்டுச் சென்றவளே ...
தொங்கி நில்லாயோ ...!

பறக்கும் சிட்டே
பால்நிலவில் என் வீடு
பனைமரத்தில் உன் கூடு
தடியோரம் நீயுறங்க..
தரையோரம் நானுறங்க..
உனக்கென்றே சொந்தங்கள்
எனக்கென்று நீதானே...!

முகில் கூட்டம் கொஞ்சையிலே
மூன்று மணித்துளியில்
என்னைத் தழுவவிடுவாள்
அலைபாயும் அருவிநீர்..!

துடுப்பின்றிப் படகுகள்
துடித்தன கடலிலே
தடம் புரண்ட ரயிலாக
சிதறுது என்மனம்

யார் அங்கு செல்கையிலும்
நான் அங்கே பார்ப்பேன்
நான் அங்கே செல்கையிலே
யார் என்னைப் பார்ப்பார்

உறவுகளைத் துறந்து ஓரமாய்
இருக்கையிலே
ஓநாயும்
என் ஒருவன் தான் ...

தேனெடுக்க வந்து
மலருக்கு முத்தம்
காற்றென வந்து
இலைகளில் தழுவல்
சிட்டென வந்து
நரம்புகளில் கூடு
அனைத்தையும் கண்டேன்
ஓரமாய் இருந்து..

தனிமை அழைக்கையிலே
தவமான காலந்தான்
தனிஎன்று எண்ணாதே
தாகங்கள் தீருமங்கே
இயற்கை இசைக்கையிலே
ஈசனும் வருவானே
வருவாயே நீயங்கே..!

அரும்புகள் மலர்கையிலே
எறும்புகள் நுழைவதும்
காதல மலர்கையிலே
கண்கள் கவிபாடும் ..

அன்புடன்
இளையகவிஞர்
ஈழமகன்
www.priyanga2008.blogspot.com

Saturday, August 1, 2009

முதல் காதல்


வீதியோரம் செல்கையிலே
வீசும் காற்றாய் நீ வந்தாய்
இதயம் தன்னை வருடிவிட்டு
எதையோ புலம்ப வைத்தாயே..

மலர் ஒன்றைக் கிள்ளி
முத்தமிடுகையிலே..
மலருக்கே மலர் இடும்
முத்தம் கண்டு ......
சொர்க்கத்தில் குதித்து
சோகத்தை மறந்தேன்

முதல்.. காதல் கூற
ஓடோடி வந்தேன்
வார்த்தைகள் சிக்கையிலே
வாதிடவா முடியும்..?
ஏதேதோ கூற வந்தேன்
ஏதுமில்லை என்றேன்
உனைப் பார்த்தபோது....

பள்ளி செல்கையிலே
பாதி வழி உன்னோடு
சிரிக்கும் மயில் அழகே ...
கார்மேகக் குழலழகே........!

என்னுள்ளே ஏதேதோ
செய்தவள் நீதானே.....
மறந்தேனே என்னை....
மார்கழியே நீ வரவே..!

பனி விழுந்த பூமுகமே..!
அன்றலர்ந்த தாமரையே..
தனியே உனைக்காண....
தவமிருந்து போனேனே..
என் ஆசை நானுரைக்க....
ஓவியம் வரைகிறது
உன் கால்கள்....
தரையில் நீ உரசையிலே..
தேய்வது என் மனசு தானே...!

செவ்வான முகத்தவளே..!
எந்நாளும் உன் நினைவே..
என் வானில் பறப்பதெல்லாம்
உன் வண்ண ஞாபகமே...!

சிதறிய முத்தழகே ...
கோர்க்கவா கைகளிலே..
தேம்பி அழுகையிலே
தேடிடவா ...கன்னக்குழி..!

தூக்கம் கலைகையிலே..
தோழியவள் நீதானே ..!
நாட்கள் நகர்கிறதே......
நாமேப்போ சேர்வதிங்கே...!

என் காதல் தேவதையே
ஏன் இன்னும் மௌனம்..!
காலமெல்லாம் வசந்தம் தான்
கண்ணே நீ அருகில் வந்தால்...!
ஓடும் நதி போல
ஓடிடுவோம் ஒன்றாக..!

காதலுடன்
இளையகவிஞர்
ஈழமகன்.
www.priyanga2008.blogspot.com

Friday, July 31, 2009

புரியாத காதலியே....


கார்மேகம் கலைகையிலே
பூலோகம் வரள்கிறதே
நீ நீங்கிப் போகையிலே
என் இதயம் வாடியதே..!

சோகம் என எண்ணி
சோர்ந்து இருக்கையிலே
மடி தந்து என்னை
தோள் தட்டிக் கொடுத்தாயே..!

காலைஎன்ன மாலைஎன்ன
மனசெல்லாம் நீதானே..
பகை வந்து கொல்லாமல் -உன்
பார்வையிலே கொன்றவள் நீதானடி..

உள்ளத்தை உருக்கி
மனதைக் கொள்ளையிட்டு
தூக்கத்தை வருடிவிட்டு
உயிரை மெல்கிறாய் ஏனடியோ..!

உன்னினைவில் நானிருந்து
என்னை மறக்கையிலே..
உடலங்கள் இரண்டேனும்
உயிரொன்று தானடி....

ஊடலும் கூடலும்
உள்ளதுதான் காதலடி
காதலில் கூடாது.......
என்றும் ஊடலடி..

பிரிந்து வாழும் நிலையிருந்தும்
சட்டைப் பையில் உன் படமே..!
தொடர்பு சாதனம்
துணையிருக்க...
துடித்து வாழ்வது ஏனடியோ..

சினிமா பார்த்த ஞாபகமும்
சிரித்துக் குலுங்கிய பூவனமும்
முத்தமிட்ட கைகளையும்
அள்ளி அணைத்த கூந்தலையும்
நினைத்துப் பார்க்கையிலே
வெந்து போகுதடி என் உள்ளமே..! .

பாசத்தில் அடிமையாகி
நேசத்தால் எனைத் தந்தேன்
வாழ்விற்கு இலக்கணமாய்
கூறிய வார்த்தைகளை
கூறிட்டுப் போனவளே………!

உன்னிடத்தில் சரணடைந்தால்
எனை உடைத்துப் போவாயோ..?
விடை பெற்றுப் போகையிலே
விழியே…எனை நினைப்பாயோ..?

தேசம் கடந்து வந்தேன்
தேம்பி அழுதாயடி...
நிதமும் உன் நினைவுகளால்
நித்திரையைத் தொலைத்தேனடி..

படுக்கையில் புரண்டாலும்
தூக்கம் இல்லையடி
மறக்கத்தான் நினைக்கிறேன்
நினைவெல்லாம் நீதானடி.
வாழ்வது உனக்காகவே
நீயின்றி ஒரு வாழ்வா..?

நட்புடன்
அஜன்
www.priyanga2008.blogspot.com

Thursday, July 30, 2009

சொர்க்கமே என் கிராமம்


அழகிய நீரோடை
அருமைப் பசுந்தென்றல்
இதமான சிட்டின்
இதயகானம்..
இரையும் வண்டின்
இசைவெள்ளம்..
பாயும் வேங்கையினம்
தாவும் குரங்கினம்
ஏகபொழில் கொண்ட
கிராமம்

பனையோலை கட்டி
தடியால் வரிந்து
கால் தட்டும் சுவர்
ஒற்றைக் குடிசைக்குள்
அத்தனை பிஞ்சுகளும்
அன்புத் தாயருகே
உறங்கையில் சொர்க்கம்..

புழுதிப் படுக்கையும்
கட்டிய சுண்டுவிரல்
அடிக்க ஊர்க்குருவி
அருந்த அருவிநீர்
அமிர்தம் தானே..!
சுட்டது கால்வாசி
சுடாதது முக்கால்
பறித்துண்ட ஞாபகம்
என் மனதில்.!

கூட்டமாக நண்பர்கள்
கூடியதும் சொர்க்கம்
நாம் செய்வது
நன்று என்று
நமக்குள் எண்ணம்..

பறந்தது கிளிகள்
கூட்டை விட்டு
சிதைந்தது சொர்க்கம்
ஒவ்வொரு திசையில்..!
வெம்பிப் பழுத்தன
இலைகள்
நரகம் என்பது
நரகமா..!

நம் வாழ்வில்
எம் குடிசை
சொர்க்கம் தான்....
மற்றவைகள் எல்லாம்
மறைந்த மறைந்த
வாழ்வே ....!!.

நட்புடன்
அஜன்
www.priyanga2008.blogspot.com

சிதறிய நீர்த்துளிகள்


காலம் கடந்தும்
என் உள்ளக் கமலவாசனை
மாறாதவளாய்
கண்டதும் அன்றலரும்
மல்லிகை மொட்டாய்
விழியோரம் விரைந்து
திறந்தது..
அல்லியில் பூத்த நீர்...

ஏந்தவும் முடியாமல்
ஏற்கவும் முடியாமல்
வெந்தது மனம் அந்தியில்
என் உள்ளத்து வேதனை
அவள் அறிவாளோ.....!
அவளது படலை
அறியும் .....!

செந்தேன் சிந்தும்
அவள் செவ்விதழ் ..
காந்தள் மலர் விழிகளில்
நீர் வற்றி நீறிய
நெருப்புப் படுக்கை
போல்
வெறுமை காட்டியது ..

துள்ளித் திரியும்
காதல் வானில்
சிறகொடிந்து
இடைவானில்
சீர்குலைந்தது ..
என் காதல் ..!

சிறு தூறல்
அவள் பேச்சு
சிட்டின் சிறகொலி
அவள் சிரிப்பு
இன்று
இறக்கை ஒடிந்தது
என் காதல்..

வலி ஒருமுறை
காதல் வலி
காலம் முடியும் வரை
என்று உன்னை நான்
சேர ....
என்னுயிர் உன்னோடும்
வெறும் கூடு
என்னோடும் ...
சேருமா என் காதல்..!!

நட்புடன்
அஜன்