Thursday, July 30, 2009

சொர்க்கமே என் கிராமம்


அழகிய நீரோடை
அருமைப் பசுந்தென்றல்
இதமான சிட்டின்
இதயகானம்..
இரையும் வண்டின்
இசைவெள்ளம்..
பாயும் வேங்கையினம்
தாவும் குரங்கினம்
ஏகபொழில் கொண்ட
கிராமம்

பனையோலை கட்டி
தடியால் வரிந்து
கால் தட்டும் சுவர்
ஒற்றைக் குடிசைக்குள்
அத்தனை பிஞ்சுகளும்
அன்புத் தாயருகே
உறங்கையில் சொர்க்கம்..

புழுதிப் படுக்கையும்
கட்டிய சுண்டுவிரல்
அடிக்க ஊர்க்குருவி
அருந்த அருவிநீர்
அமிர்தம் தானே..!
சுட்டது கால்வாசி
சுடாதது முக்கால்
பறித்துண்ட ஞாபகம்
என் மனதில்.!

கூட்டமாக நண்பர்கள்
கூடியதும் சொர்க்கம்
நாம் செய்வது
நன்று என்று
நமக்குள் எண்ணம்..

பறந்தது கிளிகள்
கூட்டை விட்டு
சிதைந்தது சொர்க்கம்
ஒவ்வொரு திசையில்..!
வெம்பிப் பழுத்தன
இலைகள்
நரகம் என்பது
நரகமா..!

நம் வாழ்வில்
எம் குடிசை
சொர்க்கம் தான்....
மற்றவைகள் எல்லாம்
மறைந்த மறைந்த
வாழ்வே ....!!.

நட்புடன்
அஜன்
www.priyanga2008.blogspot.com

No comments:

Post a Comment