Thursday, July 30, 2009

சிதறிய நீர்த்துளிகள்


காலம் கடந்தும்
என் உள்ளக் கமலவாசனை
மாறாதவளாய்
கண்டதும் அன்றலரும்
மல்லிகை மொட்டாய்
விழியோரம் விரைந்து
திறந்தது..
அல்லியில் பூத்த நீர்...

ஏந்தவும் முடியாமல்
ஏற்கவும் முடியாமல்
வெந்தது மனம் அந்தியில்
என் உள்ளத்து வேதனை
அவள் அறிவாளோ.....!
அவளது படலை
அறியும் .....!

செந்தேன் சிந்தும்
அவள் செவ்விதழ் ..
காந்தள் மலர் விழிகளில்
நீர் வற்றி நீறிய
நெருப்புப் படுக்கை
போல்
வெறுமை காட்டியது ..

துள்ளித் திரியும்
காதல் வானில்
சிறகொடிந்து
இடைவானில்
சீர்குலைந்தது ..
என் காதல் ..!

சிறு தூறல்
அவள் பேச்சு
சிட்டின் சிறகொலி
அவள் சிரிப்பு
இன்று
இறக்கை ஒடிந்தது
என் காதல்..

வலி ஒருமுறை
காதல் வலி
காலம் முடியும் வரை
என்று உன்னை நான்
சேர ....
என்னுயிர் உன்னோடும்
வெறும் கூடு
என்னோடும் ...
சேருமா என் காதல்..!!

நட்புடன்
அஜன்

No comments:

Post a Comment