Monday, August 3, 2009

தனிமை


தாலாட்டுப் பாடி
தாய் மடியில் உறங்கையிலே..
தளிர் விட்ட கனவுகள்
தடுமாறிப் போவதென்ன...

ஓடும் மேகமே
ஒரு நொடி நில்லாயோ..
தன்னந்தனி நிற்கையிலே
தன்னினைவு மறக்குதம்மா..

தென்றல் காற்றே ..
தேடுகிறேன் உன்னை ..
தொட்டுச் சென்றவளே ...
தொங்கி நில்லாயோ ...!

பறக்கும் சிட்டே
பால்நிலவில் என் வீடு
பனைமரத்தில் உன் கூடு
தடியோரம் நீயுறங்க..
தரையோரம் நானுறங்க..
உனக்கென்றே சொந்தங்கள்
எனக்கென்று நீதானே...!

முகில் கூட்டம் கொஞ்சையிலே
மூன்று மணித்துளியில்
என்னைத் தழுவவிடுவாள்
அலைபாயும் அருவிநீர்..!

துடுப்பின்றிப் படகுகள்
துடித்தன கடலிலே
தடம் புரண்ட ரயிலாக
சிதறுது என்மனம்

யார் அங்கு செல்கையிலும்
நான் அங்கே பார்ப்பேன்
நான் அங்கே செல்கையிலே
யார் என்னைப் பார்ப்பார்

உறவுகளைத் துறந்து ஓரமாய்
இருக்கையிலே
ஓநாயும்
என் ஒருவன் தான் ...

தேனெடுக்க வந்து
மலருக்கு முத்தம்
காற்றென வந்து
இலைகளில் தழுவல்
சிட்டென வந்து
நரம்புகளில் கூடு
அனைத்தையும் கண்டேன்
ஓரமாய் இருந்து..

தனிமை அழைக்கையிலே
தவமான காலந்தான்
தனிஎன்று எண்ணாதே
தாகங்கள் தீருமங்கே
இயற்கை இசைக்கையிலே
ஈசனும் வருவானே
வருவாயே நீயங்கே..!

அரும்புகள் மலர்கையிலே
எறும்புகள் நுழைவதும்
காதல மலர்கையிலே
கண்கள் கவிபாடும் ..

அன்புடன்
இளையகவிஞர்
ஈழமகன்
www.priyanga2008.blogspot.com

Saturday, August 1, 2009

முதல் காதல்


வீதியோரம் செல்கையிலே
வீசும் காற்றாய் நீ வந்தாய்
இதயம் தன்னை வருடிவிட்டு
எதையோ புலம்ப வைத்தாயே..

மலர் ஒன்றைக் கிள்ளி
முத்தமிடுகையிலே..
மலருக்கே மலர் இடும்
முத்தம் கண்டு ......
சொர்க்கத்தில் குதித்து
சோகத்தை மறந்தேன்

முதல்.. காதல் கூற
ஓடோடி வந்தேன்
வார்த்தைகள் சிக்கையிலே
வாதிடவா முடியும்..?
ஏதேதோ கூற வந்தேன்
ஏதுமில்லை என்றேன்
உனைப் பார்த்தபோது....

பள்ளி செல்கையிலே
பாதி வழி உன்னோடு
சிரிக்கும் மயில் அழகே ...
கார்மேகக் குழலழகே........!

என்னுள்ளே ஏதேதோ
செய்தவள் நீதானே.....
மறந்தேனே என்னை....
மார்கழியே நீ வரவே..!

பனி விழுந்த பூமுகமே..!
அன்றலர்ந்த தாமரையே..
தனியே உனைக்காண....
தவமிருந்து போனேனே..
என் ஆசை நானுரைக்க....
ஓவியம் வரைகிறது
உன் கால்கள்....
தரையில் நீ உரசையிலே..
தேய்வது என் மனசு தானே...!

செவ்வான முகத்தவளே..!
எந்நாளும் உன் நினைவே..
என் வானில் பறப்பதெல்லாம்
உன் வண்ண ஞாபகமே...!

சிதறிய முத்தழகே ...
கோர்க்கவா கைகளிலே..
தேம்பி அழுகையிலே
தேடிடவா ...கன்னக்குழி..!

தூக்கம் கலைகையிலே..
தோழியவள் நீதானே ..!
நாட்கள் நகர்கிறதே......
நாமேப்போ சேர்வதிங்கே...!

என் காதல் தேவதையே
ஏன் இன்னும் மௌனம்..!
காலமெல்லாம் வசந்தம் தான்
கண்ணே நீ அருகில் வந்தால்...!
ஓடும் நதி போல
ஓடிடுவோம் ஒன்றாக..!

காதலுடன்
இளையகவிஞர்
ஈழமகன்.
www.priyanga2008.blogspot.com